Volg ons
iBookstore
Android app on Google Play
Vind ik leuk
Een programma van
வயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே?
25 April 2017

ஆயிரக்கணக்கான செய்மதிகள் பூமியைச் சுற்றி வலம்வருகின்றன. ஆனால் அவை நிரந்தரமாக பூமியை சுற்றிவருவதில்லை. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளும், விண்வெளியின் கடினமான நிலைமைகளும் செய்மதிகளின் வாழ்வுக்காலத்தை பாதிக்கின்றன.


அவை செயலிழந்த பின்னரோ, அல்லது வாழ்வுக்காலத்திற்குப் பிறகு, மற்றைய செய்மதிகளை பாதிக்காமல் இருக்க பெருமளவு அவதானம் மேற்கொள்ளப்படுகிறது.
பூமிக்கு மிக அருகில் சுற்றிவரும் செய்மதிகளை இன்னும் அருகில் சுற்றிவருமாறு செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்த செய்மதிகளின் வாழ்வுக்காலம் முடிந்தவுடன் (அண்ணளவாக 25 வருடங்கள்), பூமியின் வளிமண்டலத்தினுள் இவை நுழைந்து எரிந்துவிடும்.

ஆனால் இது பூமிக்கு தொலைவில் சுற்றிவரும் செய்மதிகளுக்கு சாத்தியப்படாது. மீண்டும் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைவதற்கு தேவையான எரிபொருளை காவிச்சென்றால்  விண்வெளிக்கே கொண்டுசெல்ல முடியாது காரணம்  அவற்றின் எடை  அதிகமாக இருக்கும். எனவே இந்த செய்மதிகளின் வாழ்வுக்கு காலம் முடிந்தவுடன் இவை “மயானச்” சுற்றில் (graveyard orbit) விடப்படுகின்றன.


இந்த graveyard சுற்று மற்றைய தொழிற்படும் செய்மதிகளின் சுற்றுப்பாதைக்கும்  மிகத்தொலைவில் இருக்கின்றது. இதனால் இந்த graveyard சுற்றில் சுற்றும் வாழ்க்கைக்காலத்தை முடித்த செய்மதிகள் தொழிற்படும் செய்மதிகளோடு மோதும் வாய்ப்பில்லை.


இந்த மாதம் Metrosat-7 எனும் செய்மதி 20 வருட சேவைக்குப் (எதிர்பார்த்த காலத்தைவிட 15 வருடங்கள் அதிகமாகவே!) பின்னர் graveyard சுற்றுக்குக்கு அனுப்பப்பட்டது.


Metrosat-7 காலநிலையை அவதானிக்கும் செய்மதிக் குழுவில் ஒரு அங்கமாகும். இவை முழுப் பூமியையும் அவதானித்து காலநிலை எதிர்வுகூறல்களையும் எச்சரிக்கையையும் வழங்கும். பனிப்புயலோ, அடைமழையோ இவற்றின் கண்களில்  தப்பிக்க முடியாது, இதன்மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறது!


 

ஆர்வக்குறிப்பு

Graveyard சுற்றில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான செய்மதிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் விண்ணுக்கு ஏவப்படும் செய்மதிகள் மூலம் வெகுவிரைவில் இந்தப் பிரதேசமும் நிரம்பிவிடக்கூடிய சாத்தியக்கூறு அதிகம். விஞ்ஞானிகள் இதற்கு மாற்றுத்திட்டத்தை தேடுகின்றனர். இதில் இப்பிரதேசத்தில் இருந்து செய்மதிகளை நீக்குவது, மற்றும் சேகரிப்பது போன்றவையும் அடங்கும்.


 

M Sri Saravana, UNAWE Sri Lanka

Share:

Afbeeldingen

METEOSAT-7_finalimage
METEOSAT-7_finalimage

Printer-friendly

PDF File
1,1 MB
Nieuwsbrief

Cassini Scientist for a Day


Universe in a Box